1.
May
the universal Consciousness of God assist us to manifest our desires in our
reality successfully, efficiently and fast.
2.
This
entire visible material universe comprising all sentient beings and all
insentient things is pervaded, supported and controlled by the invisible
spiritual universe.
3.
The
universal Consciousness, residing in the spiritual universe, brings towards us
persons, things, events and circumstances in our life consistent with our
desires, thoughts and words.
4.
Thus,
our passionate and persistent desires, thoughts and words have creative
potential.
5.
Therefore,
when we think, talk and desire in a specified manner, the universal
Consciousness can be invoked to move the material universe in certain manner to
bring things, persons, events and circumstances towards us to provide us with
opportunities for the actual fulfilment of what we desired.
6.
However,
invoking universal Consciousness for a specific purpose is not always easy.
7.
The universal
Consciousness is not our servant. We cannot dictate terms to It. In fact, we
are Its servants.
8.
Only
if we place our request after complying with a few Rules dictated by It, our
request will be honoured by It in the way we want it to be.
9.
We
learn the Rules, obey the Rules and then place our request to get what we want.
1. இறை உயிருணர்வு, நம் விருப்பங்கள் வெற்றிகரமாகவும் சரியாகவும் விரைவாகவும்
நிறைவேற உதவி, அருள்புரியட்டும்.
2. அனைத்து உயிருள்ளவை உயிரற்றவைகளை உள்ளடக்கிய, காணப்படும் இப்பொருள்
உலகம் முழுவதும், காண இயலா ஆன்மீக உலகத்தால் ஊடுருவப்பட்டு தாங்கப்பட்டு ஆளப்படுகிறது.
3. ஆன்மீக உலகில் பரவி நிற்கும் இறை உயிருணர்வு, நம் விருப்பங்கள்,
எண்ணங்கள், வார்த்தைகளுக்கு இயைந்தவாறு, ஆட்களையும் பொருட்களையும் நிகழ்வுகளையும் சூழ்நிலைகளையும்
நம்மிடம் வரவழைக்கிறது.
4. தொடர்ச்சியானதும் பேரார்வத்துடன் கூடியதுமான நம் விருப்பங்களும்
எண்ணங்களும் வார்த்தைகளும் நிஜத்தை உருவாக்கும் சக்தி வாய்ந்தவை.
5. ஆகவே, நம் விருப்பங்கள் நிறைவேறும் பொருட்டு, நாம் ஒரு குறிப்பிட்ட
விதத்தில் பேசுவது, நினைப்பது, விரும்புவதன் மூலமாக, இறை உயிருணர்வைத் தூண்டி, ஆட்களையும்
பொருட்களையும் நிகழ்வுகளையும் சூழ்நிலைகளையும் நம்மிடம் வரவழைக்க இயலும்.
6. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட இலக்கின் பொருட்டு இறை உயிருணர்வைத்
தூண்டுவது எளிதல்ல.
7. இறை உயிருணர்வு ஒன்றும் நம்முடைய ஆளுகைக்கு உட்பட்டது அல்ல. நம்முடைய
உத்தரவுகளுக்கு அது கட்டுப்பட்டது அல்ல. நாம்தான் அதன் ஆளுகைக்கு உட்பட்டவர்கள்.
8. நம்முடைய வேண்டுகோள் நாம் விரும்பும் விதத்தில் நிறைவேற வேண்டுமானால்,
அது நிர்ணயித்த விதிகளை நாம் பின்பற்ற வேண்டும்.
9. எனவே, நாம் விரும்புவது நிறைவேற, அந்த விதிகளைக் கற்று, பின்பற்றி
நம் வேண்டுகோளை முன்வைக்க வேண்டும்.
10.
Faith
of our heart is manifested in our physical reality because it triggers
particular pattern of our desires, thoughts and words that will trigger the
universal Consciousness into action necessary for the fulfilment of the faith
of our heart.
11.
In
other words, if what we desire is to be successfully manifested in our reality,
we have to first convince our heart to believe in its fulfilment.
12.
Visualization
is a very powerful technique to clearly define our goal to our heart.
13.
It is to
vividly imagine the picturized end result we want, a few times a day until we
actually realize it.
14.
Our
heart innately cannot perceive the Time division. Note that we hardly feel the
passing time during dreamless deep sleep when our mind is absent.
15.
Therefore,
we can create the state of heart that will, under certain conditions, happen in
future, in the present itself.
16.
Visualization
tricks the heart to get a state in the present that can be normally reached
only in the future.
10. நம் நெஞ்சம் எதனை உறுதியாக நம்புகிறதோ, அதுவே நிஜத்தில் நிறைவேற்றப்படுகிறது.
ஏனெனில், அது நிறைவேறத் தேவையான செயல்களைச் செய்யும்படி இறை உயிருணர்வைத் தூண்டும்
நம் விருப்பங்களையும் எண்ணங்களையும் வார்த்தைகளையும் அந்த உறுதியான நம்பிக்கை பிறப்பிக்கிறது.
11. ஆகவே, நாம் விரும்புவது நிஜத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட வேண்டுமானால்,
முதலில் அதனை நம் நெஞ்சம் உறுதியாக நம்புமாறு செய்ய வேண்டும்.
12. கற்பனைக் காட்சிப்படுத்துதல், நாம் விரும்பும் இலக்கை நம் நெஞசத்துக்குத்
தெளிவாக வரையறுக்க உதவும் ஒரு சக்தி வாய்ந்த செயல்முறை ஆகும்.
13. நாம் விரும்பும் இலக்கின் காட்சியை, அது நிஜத்தில் நிறைவேறும் வரையில்,
தினமும் சில முறை தெளிவாகக் கற்பனை செய்வதே, கற்பனைக் காட்சிப்படுத்துதல் செயல்முறை
ஆகும்.
14. நம் நெஞ்சம் இயல்பாகவே கால வேறுபாட்டை அறிவதில்லை. மனம் ஒடுங்கி
நிற்கும் கனவுமற்ற ஆழ்ந்த தூக்கத்தில் நேரம் செல்வது நமக்குத் தெரிவதில்லை.
15. ஆகவே, எதிர்காலத்தில் நிகழ வாய்ப்புள்ள நெஞ்சத்தின் நிலையை, நிகழ்காலத்திலேயே
உருவாக்கிவிட இயலும்.
16. கற்பனைக் காட்சிப்படுத்துதல் செயல்முறை, நாம் விரும்பும் எதிர்கால
நிகழ்வு நிலையை, தற்போதே நம் நெஞ்சத்தில் ஏற்படுத்த வல்லது.
17.
If
faith of our heart is not carried over to our mind, then activities of our mind
are likely to distort the faith of our heart leading to physical manifestation
that can be significantly different from what we desired.
18.
Our
mind with its rich memory believes only in what we have already experienced.
19.
But
our goals and ambitions are something to do with future experience we desire to
happen in our life.
20.
Our
mind will refuse to believe that such future experience will happen in our life
that is contrary to our past and present experiences.
21.
We can
use Affirmation technique to create faith in our mind.
22.
We
design an affirmation statement that serves to nullify the scepticism of our
mind that is liable to modify the faith of our heart, and read and/or write it
a few times a day until we realize what we want in our physical reality.
23.
Our
mind is very much aware of the Time division. Affirmation uses our mind; it
cannot bypass it.
24.
Therefore,
we can’t use, for an example, affirmations like ‘I am financially free’ to
convince our mind to manifest financial freedom.
25.
We
have to use the power of gratitude for assistance in manifestation. Then it
will work.
26.
Thus,
the affirmation ‘Thank You God for Your assistance for me to be financially
free’ will work.
27.
As
long as we are in denial of our past manifestation that resulted in our present
state, the faith of our heart will fail to trigger the universal Consciousness
for our current manifestation.
28.
Feeling
can be used to make our body feel positively about the present state that we
are trying to change.
29.
We
stop disliking and start enjoying the activities related to our current state
that we desire to change until we realize its change in our physical reality.
30.
Only
Visualization will work for current manifestation and Feeling can be only used
to stop the denial of our past manifestation that resulted in our present state
so as to accelerate the current manifestation.
17. நம் நெஞ்சம் நம்புவதை நம் மனம் நம்பத் தவறும் போது, மனத்தின் செயல்பாடுகள்
நெஞ்சத்தின் நம்பிக்கையைத் திரித்து, நாம் விரும்பியதிலிருந்து வேறுபட்ட இலக்கை நிஜத்தில்
உருவாகச் செய்ய வாய்ப்புள்ளது.
18. ஏராளமான நினைவுகளைத் தேக்கி வைத்திருக்கும் நம் மனம், நம் பழைய
அனுபவங்களையே சுலபமாக நம்புகிறது.
19. ஆனால் நம் இலக்குகளோ எதிர்காலத்தில் நம் வாழ்வில் நிகழ நாம் விரும்பும்
அனுபவங்கள் தொடர்பானவை.
20. நம் கடந்தகால நிகழ்கால அனுபவங்களுக்கு முரணான எதிர்கால அனுபவங்கள்,
நம் வாழ்வில் நடப்பதற்கான சாத்தியக்கூறை நம் மனம் நம்ப மறுத்துவிடும்.
21. உறுதிப்படுத்தி மொழிதல் செயல்முறை வாயிலாக, மனத்தில் நம்பிக்கையை
வளர்க்க இயலும்.
22. நெஞ்சின் நம்பிக்கையைத் திரித்து விட வல்ல மனத்தின் அவநம்பிக்கையைப்
போக்குவதற்கான உறுதிப்பாடு கூற்றை வடிவமைத்துக்கொண்டு, அதனை ஒரு நாளுக்கு சில முறைகள்
வாசிக்கவோ எழுதவோ செய்யும் பயிற்சி, உறுதிப்படுத்தி மொழிதல் என்னும் செயல்முறை ஆகும்.
23. நம் மனம் காலப் பிரிவினையை மிக நன்றாக உணர வல்லது. உறுதிப்படுத்தி
மொழிதல் மனத்தில் செயல்படுவதால், அதனைத் தவிர்க்க இயலாது.
24. எனவே, மனத்தில் நிதி சுதந்திர உணர்வை விதைப்பதற்கு, 'நான் நிதி
சுதந்திரத்துடன் இருக்கிறேன்' என்பது போன்ற கூற்றுகளைப் பயன்படுத்த முடியாது.
25. நம் விருப்பங்கள் நிறைவேறுவதற்குச் செய்யப்படும் உதவிக்கான நன்றியுணர்வுதான்
சரியாக செயல்படும்.
26. உதாரணமாக, 'நான் நிதி சுதந்திரம் அடைய உதவும் இறைவனுக்கு நன்றி'
என்பது போன்ற கூற்றுகள் சரியாக செயல்படும்.
27. நம்முடைய தற்போதைய நிலை உருவாகியதற்கு நம்முடைய கடந்தகாலப் பங்களிப்பை
நம்மால் ஏற்றுக்கொள்ள இயலாத வரையில், எதிர்காலத்தில் நமக்கு நிகழ விரும்புவதை உருவாக்கும்
வகையில், நம் நெஞ்சத்து நம்பிக்கையால் இறையுணர்வைத் தூண்ட இயலாது.
28. நாம் மாற்ற விரும்பும் தற்போதைய நிலையைப் பற்றி எதிர்மறையாக நம்
உடல் உணர்வதைத் தவிர்த்து நேர்நிலையாக உணரச் செய்ய, நேர்நிலை உணர்வுப்படுத்துதல் என்னும்
செயல்முறை பயன்படுத்தப்படுகிறது.
29. நாம் மாற்ற விரும்பும் தற்போதைய நிலை தொடர்பான செயல்களை, அந்நிலை
மாறும் வரையில், விரும்பிச் செய்வதே, நேர்நிலை உணர்வுப்படுத்துதல் செயல்முறையாகும்.
30. நம் விருப்பங்கள் நிறைவேறும் பொருட்டு இறையுணர்வைத் தூண்ட உதவுவதன் மூலமாக, நேர்நிலை உணர்வுப்படுத்துதல் செயல்முறை, நம் விருப்பங்களை உருவாக்கும் முயற்சிகள் பலனளிப்பதை விரைவுபடுத்துகிறது.
31.
Manifestation
Methods like Visualization, Affirmation and Feeling focus on the creation and
maintenance of positive faith in our heart related to a particular aspect of
our life.
32.
However,
our sincere attempts to create and maintain a particular faith in our heart so
as to manifest what we desire are thwarted by our own passionate emotional
desires, thoughts and words of negativity related to various aspects of life
like health, wealth and relationship in our family, social and professional
transactions.
33.
All
our positive Manifestation exercises are useless crap compared to the
overwhelming negativity expressed from our heart, mind and body.
34.
This
is the reason why our success rate in manifestation is so poor.
35.
Our
passionate emotional desires, thoughts and words of negativity arise from the
Negative Energy overflowing in our body, mind and heart.
36.
Negative
Energy has been stocked up in our body, mind and heart in the form of
Intolerance, Anxiety and Malice.
37.
We
cannot directly control our passionate emotional desires, thoughts and words of
negativity as and when they arise. But we can control our Negative Energy in
the form of Intolerance, Anxiety and Malice at leisure.
38.
Once
we control the Negative Energy, our passionate emotional desires, thoughts and
words of negativity are automatically and effortlessly controlled.
31. கற்பனைக் காட்சிப்படுத்துதல், உறுதிப்படுத்தி மொழிதல், நேர்நிலை
உணர்வுப்படுத்துதல் ஆகிய இம்மூன்று செயல்முறைகளும் நாம் விரும்பும் எதிர்கால நிலைக்கான
நம்பிக்கையை உருவாக்கித் தக்கவைக்க உதவுகின்றன.
32. ஆனால் இம்முயற்சியானது, நம் எதிர்மறை விருப்பங்கள், எண்ணங்கள்,
வார்த்தைகளால் நீர்த்துப்போய்விடுகிறது.
33. நம் உடல்-மனம்-நெஞ்சத்திலிருந்து வெளிப்படும் ஏராளமான எதிர்மறை
வெளிப்பாடுகளால், நம் விருப்பங்களை நிஜத்தில் உருவாக்கும் முயற்சிகள் யாவும் பயனற்றுப்
போகின்றன.
34. இதனால்தான் நம் விருப்பங்களை நிஜத்தில் உருவாக்கும் முயற்சிகளின்
வெற்றி சதவீதம் மிகவும் குறைவாக உள்ளது.
35. நமது உணர்வுபூர்வமான எதிர்மறை விருப்பங்கள், எண்ணங்கள், வார்த்தைகள்
யாவும் நம் உடல், மனம், நெஞ்சத்தில் தேங்கி நிற்கும் எதிர்மறை ஆற்றலில் இருந்து தோன்றுகின்றன.
36. ஏற்றுக்கொள்ள இயலாமை, பதற்றம் மற்றும் வெறுப்பு ஆகிய இம்மூன்று வகையாக எதிர்மறை ஆற்றல், நம் உடல், மனம், நெஞ்சத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
37. நமது உணர்வுபூர்வமான எதிர்மறை விருப்பங்கள், எண்ணங்கள், வார்த்தைகள்
தோன்றும்போதே, நம்மால் நேரடியாக இவற்றைக் கட்டுப்படுத்த இயலாது.
ஆனால், ஏற்றுக்கொள்ள இயலாமை, பதற்றம் மற்றும் வெறுப்பு ஆகிய இம்மூன்று வடிவங்களில்
நம் உடல், மனம், நெஞ்சத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள எதிர்மறை ஆற்றலை நம்மால் கட்டுப்படுத்த
இயலும்.
38. எதிர்மறை ஆற்றல் கட்டுக்குள் வந்ததும், நமது உணர்வுபூர்வமான எதிர்மறை
விருப்பங்கள், எண்ணங்கள், வார்த்தைகள் யாவும் நம் முயற்சி ஏதுமின்றி,
தானாகவே குறைந்துவிடும்.
39.
Intolerance
arises from our perception of victimization.
40.
Intolerance
is related to our past manifestation. We manifested our current state in the
past - of course, unconsciously and unknowingly. When we see its unpleasant
result, we refuse to take up responsibility for it - in fact, we deny our
manifestation itself.
41.
As
long as we are not able to accept that we have manifested our current state, we
can’t consciously manifest anything in the future.
42.
Anxiety
arises from the perception of fear.
43.
Anxiety
is related to our future manifestation. It is generated when we strongly fear
that we can’t get what we want.
44.
As
long as we admit that we can’t manifest our future, we can’t manifest our
future - it is as simple as that.
45.
Malice
is the most notorious form of Negative Energy. It arises when we hold a person
responsible for our present undesirable state. It also arises when we hold a
person responsible for blocking our future desirable state.
46.
Malice
is related to our past and/or future manifestation. It blocks our future
manifestation by reinforcing Intolerance and/or Anxiety. It deteriorates our
current state too.
47.
As
long as we hold another person responsible for our unpleasant past
manifestation and/or for blocking our future desired manifestation, we
straightaway forfeit our right to manifest our future and hand it over to our
opponents in golden platter.
39. நாம் நியாயமற்ற முறையில் பாதிப்புக்கு உள்ளானதாக நம்பும் உணர்விலிருந்து
நமக்கு, ஏற்றுக்கொள்ள இயலாமை என்ற எதிர்மறை ஆற்றல் உண்டாகிறது.
40. நம் கடந்த கால விருப்பங்கள், எண்ணங்கள், வார்த்தைகள் மூலமாக நம்மை
அறியாமலேயே நம் தற்போதைய நிலையை உருவாக்கியுள்ளோம். ஆனால் அவற்றின் விரும்பத்தகாத விளைவைக்
காணும்போது, அதனை உருவாக்கியதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம்.
41. நம் நிகழ்காலத்தை உருவாக்கியதில் நம் கடந்த காலப் பங்களிப்பை நாம்
மறுத்துக்கொண்டிருக்கும் வரையில், நாம் விரும்பும் எதிர்காலத்தை நம்மால் உருவாக்க இயலாது.
42. அச்ச உணர்விலிருந்து பதற்றம் உருவாகிறது.
43. நாம் விரும்புவது நமக்கு எதிர்காலத்தில் கைகூடாமல் போய் விடுமோ
என்ற வலுவான அச்சத்திலிருந்து பதற்ற எதிர்மறை ஆற்றல் உருவாகிறது.
44. நாம் விரும்பும் எதிர்காலத்தை நம்மால் உருவாக்க முடியாது என்று
நாம் நம்பும் வரையில், நம்மால் உருவாக்க இயலாது.
45. வெறுப்பு மிகவும் கொடிய எதிர்மறை ஆற்றலாகும். நம்மால் ஏற்றுக்கொள்ள
இயலாத தற்போதைய நிலைக்கு ஒருவர் காரணம் என்று நாம் நம்பும்போது, அவர் மீது வெறுப்பு உண்டாகிறது. நாம் விரும்பும் எதிர்காலத்தை ஒருவர் தடுப்பதாக
நாம் நம்பும் போதும், அவர் மீது வெறுப்பு உண்டாகிறது.
46. வெறுப்பு, ஏற்றுக்கொள்ள இயலாமையையும் பதற்றத்தையும் வலுப்படுத்தி, நாம் விரும்பும் எதிர்காலத்தை நாம் உருவாக்குவதைத் தடுக்கிறது. தவிரவும்,
தற்போதைய நிலையையும் தரந்தாழ்த்துகிறது.
47. நம்மால் ஏற்றுக்கொள்ள இயலாத தற்போதைய நம் நிலையை உருவாக்கியதற்கும், நாம் விரும்பும் எதிர்காலத்தை நாம் உருவாக்குவதைத் தடுப்பதற்கும் நாம் பிறரைக் பொறுப்பாக்கும் வரையில், நாம் விரும்பும் எதிர்காலத்தை உருவாக்கும் உரிமையை விட்டுக் கொடுத்து, தங்கத் தட்டில் வைத்து, நம் எதிரிகளுக்கு நாமே தாரைவார்க்கிறோம்.
48.
An
Enlightened person effortlessly gets his Negative Energy neutralized because he
can instantaneously retract his identity from his body-mind-heart at his will by
the sheer power of Enlightenment.
49.
Though
we cannot exactly duplicate the method of an Enlightened, there is a work
around to get our Negative Energy significantly reduced in a similar mechanism.
50.
When
we believe that Lord of the universe resides within an Enlightened, we can also
start believing that Lord resides within us, too.
51.
When
we believe that Lord resides within us, we can start believing that Lord
resides in all.
52.
And
when we believe that Lord resides in all, our identity gets discriminated from
our body-mind-heart leading to the inevitable reduction of Negative Energy
overflowing therein.
53.
To get
opportunities for the fulfilment of our goals and ambitions, we follow four
steps.
54.
First,
we visualize the fulfilled state.
55.
Second,
we affirm the assistance of universal Consciousness of God.
56.
Third,
we feel the acceptance of what we are, have or do now.
57.
And
finally, we get our Negative Energy reduced by the practice of seeing Lord of
the universe in all.
58.
These
four steps constitute our Spiritual Prayer.
59.
Such a
Spiritual Prayer invokes the universal Consciousness of God to bring
opportunities for the fulfilment of our goals and ambitions.
60. May the universal Consciousness of God assist us to manifest our desires in our reality successfully, efficiently and fast.
*****
Surrender Prayer Service is a free global online daily spiritual prayer service conducted by me. The primary intention of this Surrender Prayer Service is to help the participants live their life consciously, architect their future, get divine assistance in facing their day-to-day challenges in their personal, professional and social life.
* There is no specific timing for doing this Prayer. You may choose your convenient timing.
* You can pray from anywhere - home, workplace or any other convenient place. Of course, you may pray from any country.
* You may belong to any religion or no religion. This is a spiritual Prayer Service that works transcending religions.
* Please note that this Prayer Service is designed for long-term participation.
How to participate in Surrender Prayer Service
Go to my instagram profile (https://www.instagram.com/umasreedasan) and click on my Profile icon & read the Prayer Statement I am posting every day. That's all.
If you follow me on Instagram, you'll conveniently see my Profile icon on your Instagram home page itself.
Please be assured that you have my backup prayer for you every single day you participate, if you are a regular longtime participant.
*****
48. ஆன்மீக ஞானமடைந்த ஒருவர் தன் ஆன்மீக பலத்தால், தன் அடையாளத்தை தன்
உடல்-மனம்-நெஞ்சத்திலிருந்து அதிவிரைவில் உள்முகமாக விலக்கிக் கொள்ள இயலும் என்பதால்,
அவர் எளிதாக தன் எதிர்மறை ஆற்றலைச் செயலிழக்கச் செய்யும் வல்லமை பெற்றவராக இருக்கிறார்.
49. அத்தகைய செயல்முறையை நம்மால் அப்படியே கடைப்பிடிக்க இயலாவிட்டாலும்,
அது போன்று செயல்படும் வேறு ஒரு செயல்முறை மூலமாக நம் எதிர்மறை ஆற்றலைக் கணிசமான அளவு
குறைத்துக்கொள்ள இயலும்.
50. இவ்வுலகை ஆளும் இறைவன், ஆன்மீக ஞானமடைந்த
ஒருவர் நெஞ்சில் எப்போதும் வாழ்கிறான் என்ற நம்பிக்கை நமக்கு வரும்போது, அந்த இறைவன்
நம்முள்ளும் இருக்கிறான் என்ற நம்பிக்கை பிறக்கத் தொடங்கும்.
51. நம்முள் இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை நமக்கு வரும்போது, அந்த
இறைவன் நாம் காணும் எல்லோருள்ளும் இருக்கிறான் என்ற நம்பிக்கை பிறக்கத் தொடங்கும்.
52. எல்லோருள்ளும் இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை நமக்கு வரும்போது,
நம் உடல்-மனம்-நெஞ்சத்திலிருந்து நம் அடையாளம் உள்முகமாக வேறுபடுத்தப்பட்டு, எதிர்மறை
ஆற்றல் தன்னடையே குறையத் தொடங்குகிறது.
53. நம் எதிர்கால இலக்குகள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகளைப் பெறுவதற்கு
பின் வரும் நான்கு படிநிலைகளைப் பின்பற்ற வேண்டும்.
54. முதலாவது, நிறைவேறிய நிலையைக் கற்பனைக் காட்சிப்படுத்திப் பயில
வேண்டும்.
55. இரண்டாவதாக, இறை உயிருணர்வின் உதவியை நம்புவதற்கான, உறுதிப்படுத்தி
மொழிதல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
56. மூன்றாவதாக, நம் தற்போதைய நிலையை ஏற்றுக்கொள்வதற்கான நேர்நிலை உணர்வுப்படுத்துதல்
பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
57. இறுதியாக, எதிர்மறை ஆற்றலைக் கணிசமான அளவு குறைக்க வேண்டி, காணும்
அனைவருள்ளும் இறைவனைக் காணும் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
58. இந்நான்கு படிநிலைகளும் சேர்ந்ததுதான் ஆன்மீகப் பிரார்த்தனை.
59. தொடர்ச்சியான இத்தகைய ஆன்மீகப் பிரார்த்தனை, நம் எதிர்கால இலக்குகள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகளை நம்மிடம் கொண்டுவரும் பொருட்டு, இறை உயிருணர்வைத் தூண்டுகிறது.
60. இறை உயிருணர்வு, நம் விருப்பங்கள் வெற்றிகரமாகவும் சரியாகவும் விரைவாகவும்
நிறைவேற உதவி, அருள்புரியட்டும்.
*****
சரணாகதி பிரார்த்தனைப் பணியானது, என்னால் நடத்தப்படும் இலவச உலகளாவிய இணையவழி தினசரி ஆன்மீக பிரார்த்தனைப் பணியாகும். இந்த சரணாகதி பிரார்த்தனைப் பணியின் முக்கிய நோக்கமாவது, பங்குபெறும் அன்பர்கள் தங்கள் வாழ்வை விழிப்புணர்வுடன் வாழ்வதற்கும், தங்கள் எதிர்காலத்தை நிர்மாணிப்பதற்கும், தங்கள் அன்றாட குடும்ப-தொழில்-சமூக வாழ்வில் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான இறையுதவி பெறுவதற்கும் உதவுவதாகும்.
* இந்தப் பிரார்த்தனையில் கலந்துகொள்வதற்கு குறிப்பிட்ட நேரம் எதுவும் கிடையாது. பங்குபெறுவோர் தங்களுக்கு வசதியான நேரத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
* இந்தப் பிரார்த்தனையில் கலந்துகொள்வதற்கு குறிப்பிட்ட இடம் என்று எதுவும் கிடையாது. வீடு, அலுவலகம், அல்லது வேறு வசதியான இடம் என்று, பங்குபெறுவோர் தங்களுக்கு வசதியான இடத்தைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். உலகின் எந்த நாட்டிலிருந்தும் பங்குபெறலாம்.
* நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம்; எந்த மதத்தையும் சேராதவராகவும் இருக்கலாம் - இந்த பிரார்த்தனைப் பணி, ஆன்மீகரீதியாக செயல்பட்டு, பயனளிக்க வல்லது.
* இந்த பிரார்த்தனைப் பணி, நீண்டகாலம் பங்குபெற்று, நாளடைவில் பயன்பெறும்படி வடிவமைக்கப்பட்ட ஒன்று.
சரணாகதி பிரார்த்தனைப் பணியில் நீங்கள் பங்கு பெறுவது எப்படி?
என்னுடைய இன்ஸ்டாகிராம் புரஃபைலுக்கு ( https://instagram.com/umasreedasan ) தினமும் செல்லுங்கள். புரஃபைல் ஐகானை ‘கிளிக்’ செய்யுங்கள். திரையில் தெரியும் பிரார்த்தனையை வாசியுங்கள். அவ்வளவுதான்.
என்னுடைய அக்கவுண்ட்டை (@umasreedasan) நீங்கள் பின்தொடர்ந்தால், உங்கள் இன்ஸ்டாகிராம் ஹோம் பக்கத்திலேயே தினமும் என் புரஃபைல் ஐகானை வசதியாகப் பார்க்கலாம்.
நீங்கள் தினசரி தொடர்ந்து பங்குபெறுபவராக இருந்தால், நீங்கள் பங்குபெறும் ஒவ்வொரு நாளும், உங்களுக்கான என்னுடைய பிரார்த்தனையும் இருக்கும் என்பதை உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
Comments
Post a Comment